குல தெய்வ வழிபாடு ஏழு தலைமுறைகளைக் காக்கும்.
குலதெய்வத்திற்கு அப்படி ஒரு சக்தி இருக்கிறது.
தெய்வ வழிபாடுகளில் குலதெய்வ வழிபாடு என்பது அவரவர்களுடைய முன்னோர்கள் பல தலைமுறைகளாய் வழிபட்டு வந்த தெய்வமாகும்.
குலம் என்றால் குடும்ப பாரம்பரியம் என்று பொருள்.
நமது குடும்பத்திற்கென்று ஒரு வழிபாட்டு தெய்வத்தினை நமது முன்னோர்கள் வைத்திருக்கிறார்கள்.
தனது அடுத்த சந்ததியினர் நன்றாக இருக்க வேண்டும் என்பதே குலதெய்வ வழிபாட்டின் முக்கியக் குறிக்கோளாகும்.
உங்கள் வீடுகளில் உள்ள பூஜை அறைகளில் உங்கள் குலதெய்வத்தின் படம் தான் முதலில் இடம் பெற வேண்டும்.
உங்களுக்கு பிடித்த இஷ்ட தெய்வத்தின் படம் இருக்கலாம்.
பூஜை அறையில் உங்களின் குறைகளை உங்களின் குலதெய்வத்திடம் சொல்லி வேண்டுங்கள்
அனைத்து குறைகளையும் அந்த குலதெய்வம் உங்களுக்கு தீர்த்துவைக்கும்.
உங்கள் கூடவே அது வரும். நாட்கள் ஆக ஆக தான் அதன் அருமை உங்களுக்கு புரியும்.
நாம் அனுபவிக்கும் எல்லா பலன்களும் நாமும், நம் முன்னோர்களும் செய்த புண்ணியத்தின் அடிப்படையிலேயே கிடைக்கிறது.
ஜாதகத்தில் உள்ள எல்லா தோஷங்களையும் பித்ரு பூர்வபுண்ணிய ஸ்தானத்தின் காவல் தெய்வங்களான உங்கள் குலதெய்வம் தீர்க்கும்.
ஒருவரின் சந்தோஷமான சுபிட்சமான வாழ்க்கைக்கு குலதெய்வ ஆராதனையும், பித்ருக்களின் ஆசியும் மிக முக்கியம்.
குலதெய்வத்தை யார் ஒருவர் விடாமல் தொடர்ந்து வழிபாடு செய்கிறார்களோ, அவர்களுக்கு வேண்டும் வரம் எல்லாம் கிடைக்கும்.
குலதெய்வவழிபாடுகோடிதெய்வவழிபாடு