குலதெய்வ வழிபாடு செய்தால்தான் அனைத்து தெய்வங்களின் ஆசியும் அருளும் நமக்குக் கிடைக்கும் என்பது உறுதி!
எந்த தெய்வத்தை வழிபட்டாலும் முதலில் பிள்ளையாரை வழிபட்டுவிட்டுத்தான் அடுத்தடுத்து தெய்வங்களை வழிபடுவோம். அப்படித்தான் எந்தத் தெய்வத்தை வணங்குவதாக இருந்தாலும் முதலில் நாம் அனைவரும் வழிபட வேண்டியது குலதெய்வத்தைத்தான் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.
இஷ்ட தெய்வம் என்பதோ பரிகார தெய்வங்கள் என்பதோ நமக்குப் பலன்களைக் கொடுக்க வேண்டுமென்றால் நாம் மறக்காமல் குலதெய்வ வழிபாட்டைச் செய்து கொண்டே இருக்கவேண்டும். குலதெய்வ வழிபாடு செய்யச் செய்யத்தான், இஷ்ட தெய்வங்களோ பரிகார தெய்வங்களோ நமக்கு நன்மைகளை வழங்குவார்கள்.
குலதெய்வம் என்பது நம்மைப் போலவே வாழ்ந்த நம்முடைய முன்னோர்களாகவும் நம் பூர்வீகத்தைக் கொண்டவர்களாகவும் இருப்பார்கள். அவர்களையே நம் குலசாமிகளாக போற்றி வழிபட்டு வருவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறோம்.
குலதெய்வத்தை தினமும் வணங்கவேண்டும். குலதெய்வக் கோயிலுக்கு மாதத்துக்கு ஒருமுறையேனும் சென்று தரிசிக்க வேண்டும். அமாவாசை, பெளர்ணமி முதலான நாட்களில் குலதெய்வ வழிபாடு செய்யவேண்டும்.
குலதெய்வத்தை வணங்கி வழிபட்டு வருவோம்!
நம் குலத்தை, கண்ணைப் போல் காத்தருள்வார்கள்!.